அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடத்தை, பாகிஸ்தான் அரசு இடித்து தள்ளியது. பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரத்தில், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்ததை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.அதன்பின், கடந்த ஆண்டு மே மாதம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒசாமாவை, அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஒசாமாவின் உடலையும் எடுத்து சென்று கடலுக்குள் புதைத்தனர். ஒசாமா புதைக்கப்பட்ட இடம் பற்றி
தகவல் வெளியிட்டால், அந்த இடத்தை அல்காய்தாவினர் நினைவிடமாக மாற்றிவிடலாம் என்று அமெரிக்கா அஞ்சியது.
அதனால், ஒசாமாவின் உடல் புதைக்கப்பட்ட இடம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அபோதாபாத்தில் அவர் பதுங்கி இருந்த கட்டிடத்தையும் இடித்துவிட வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. அதன்படி, அந்த கட்டிடத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று இடித்தனர்.
2 புல்டோசர்களில் வந்த ஊழியர்கள், கட்டிடத்தை இடித்து தள்ளும் பணியை தொடங்கினர். அசம்பாவிதம் ஏதும் நடப்பதை தடுக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தை இடிப்பதை பார்த்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கட்டிடத்தில் ஒசாமா தங்கியிருந்த அறை உள்பட 3வது மாடியை இடித்து விட்டோம். இடிக்கும் பணி தொடர்கிறதுÕÕ என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக