ஜோர்டானை சேர்ந்தவர் அபுகுவடா. இவரது இயற்பெயர் ஒமர் ஓத்மன். இவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் முக்கிய கூட்டாளி ஆவார். ஜோர்டானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி. அவரை அந்த நாட்டு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி வந்தார். இதையடுத்து இங்கிலாந்திலும்
நாசவேலையில் ஈடுபட்டதாக பொய்யான குற்றசாட்டை கூறி அவர் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரையில் அரசால் அவரின் குற்றத்தை நிரூபிக்கமுடியாமல் 6 1/2 ஆண்டுகளாக விசாரணை எதுவுமின்றி தொடர்ந்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதற்கு ஐரோப்பிய மனித உரிமை கழக கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து கடுமையான நிபந்தனையின் கீழ் அவரை லண்டன் கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. எனவே அவர் ஜோர்டானுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் தன் மீது உள்ள வழக்கு விசாரணையில் பங்கேற்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஜோர்டான் அரசு தவறினால் 3 மாதத்தில் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இங்கிலாந்து நிபந்தனை விதித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக