சிறை வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இ ராணுவத் தளபதி, சரத் பொன்சேகாவை விடுதலை செ ய்யக் கோரி நடைபெற்ற ஆர்பாட்டம் பேரணியாக மா றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைக்காக உயர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சே கா மருத்துவ பரிசோதனைகளுக்கென வைத்தியசா லைக்கு அழைத்துச் செல்லப்படாமல் மீண்டும் சிறைக் கே அழைத்துச்
செல்லப்பட்டுள்ளார்.சரத்பொன்சேகா வின் விடுதலைகோரி ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு இத் தகவல் தெரிய வரவே, ஆர்பாட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்தினை வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கிய பேரணி மாற்றித் தொடர்வதாகத் தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க தன்னை வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லாது, மாற்றுவழியில் சிறைச்சாலைக்குக் கொண்டு வந்தததைக் கண்டித்து, சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவும், வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்திருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4ம் திகதி சிறிலங்காவின் 64வது சுதந்தினத்தை முன்னிட்டு, வெலிக்கடைச் சிறையிலிருந்து 1414 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொதும், தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவில்லை. ஆயினும் சிறிலங்கா ஜனாதிபதியிடம் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரும் பட்சத்தில் அவரது விடுதலைக்கு ஜனாதிபதி பரிந்துரை செய்யலாம் எனும் கருத்துக்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக