தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.1.12

ரகசிய இடத்தில் யுரேனியத்தை செறிவூட்டத் துவங்கியது ஈரான்!


ஈரானின் அணு உற்பத்திக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அணு உற்பத்தியை தடுக்க அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் அணு உலையை குண்டு வீசி தகர்க்கலாம் என்ற அச்ச உணர்வு ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது.எனவே, வடகிழக்கு பகுதியில் உள்ள  மலைப்பகுதி ஒன்றில் 300 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ள பாதாளஅறையில் வைத்து யுரேனியம் செறிவூட்டப்பட்டு அணு உற்பத்தி செய்கிறது.
இங்கு ஏவுகணைகளுடன் கூடிய ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யுரேனியத்தை செறிவூட்டும் புதிய மையம் தரைக்கடியில் யாருக்கும் தெரியாத இடத்தில் செயல்படுகிறது. எனவே வெளிநாடுகள் தாக்கக்ககூடும் என்கிற ஆபத்து வராது என கருதப்படுகிறது.

ஈரான் அணு சக்தி துறையின் தலைவர் ஃபர்துன் அப்பாசி, போர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் பணி விரைவில் தொடங்கும் என  தெரிவித்தார். ஈரானிடம் ஏற்கெனவே நடான்ஸ் என்ற இடத்தில் யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்ளது. இது மிகப் பெரிய மையமாகும். ஆனால் போர்டோ பகுதியில் அமைந்துள்ள மையம் புதிய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்பதோடு அல்லாமல் வெளிநாடுகள் எளிதாக தாக்கிவிடமுடியாத ஒரு இடமாகும்.

ஈரானின் அணுசக்தி தயாரிப்பு குறித்து அமெரிக்காவும், மேற்குலகும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்ற, இந்நிலையில், ஈரானின் பெட்ரோல் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டால்,ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என, ராணுவ துணைத் தளபதி அலி அஷ்ரப் நூரி மிரட்டல் விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை வழியாக, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது. இதற்கு முன்பும், நீரிணையை மூடப் போவதாக ஈரான் அதிகாரிகள் சிலர் அவ்வப்போது மிரட்டினாலும், அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளது, இப்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான இச்சூழலில், அமெரிக்கா தனது பரம எதிரிகளாகக் கருதும், கியூபா, வெனிசுலா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரான் அதிபர், அகமதி நிஜாத் நேற்று முதல், ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஈரானின் யுரேனிய செறிவூட்டல் அறிவிப்பு, நீரிணையை மூடுவது குறித்த மிரட்டல் ஆகிய ஈரான் அதிபரின், இச்செயல்கள் அமெரிக்காவின் எரிச்சலை மேலும் கிளப்பியுள்ளன.

 செய்திகள் at www.inneram.com

0 கருத்துகள்: