மலேசியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக கருதப்படும் தீர்ப்பு ஒன்றினை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.மலேஷியாவின் எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் துணைப்பிரதமருமான அன்வர் இப்ராஹிம் மீது கடந்த 1990-ம் ஆண்டு பாலியல் குற்றம் சாட்டப்பட்டது.பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட நாட்களாக நடந்த
இந்த வழக்கில் மலேஷியாஉயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கிலிருந்து அன்வர் இப்ராஹிம் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மலேஷியாஉயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கிலிருந்து அன்வர் இப்ராஹிம் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
“இது ஆளும் கட்சியின் சதி. எனது நன்மதிப்பை கெடுக்க இவ்வாறான வழக்குகளை பதிந்துள்ளார் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்” என்று அன்வர் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இவரது குற்றச் சாட்டை அரசு மறுத்துள்ளது. தான் விரைவில் துருக்கி, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ள இருப்பதாகவும் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பை கேட்க அன்வர் இப்ராஹிமின் குடும்பத்தினரும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் நீதிமன்றம் முன்பு திரண்டிருந்தனர். அன்வர் இப்ராஹிம் விடுதலை ஆன தகவல் அறிந்ததும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். தீர்ப்பையொட்டி நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக