தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.1.12

கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியில் கசியவிடாது தடுக்க தீவிர நடவடிக்கை

வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்க ளின் பெயர் பட்டியலைவருமான வரித்துறையிடமிருந்து, குற்ற புலனாய்வு இயக்குனரகம் மற்றும் மாநில வருமான வரித்துறை பிரிவுகள் உள்ளிட்ட விசாரணை அமைப்புக்கள் கேட்டு வருகின்றன.இந்நிலையில் இப் பட்டியலை, வரி வ சூலுக்காகவோ அல்லது வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சா ட்டுக்களுக்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.வேறு தேவைக்காக

பயன்படுத்த கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பித்து, கையெழுத்து வாங்கிய பின்னர் அந்த அரசு துறைகளுக்கு வழங்க முன்வர வேண்டுமென வருமான துறைக்கு (மத்திய நேரடி வரிகள் வாரியம்) CBDD உத்தரவிட்டுள்ளது.

 இப்பட்டியலில் உள்ளவர்கள் எவரையும் கைது செய்துவிட கூடாது. இப்பட்டியலை இரகசியமாகவும், அவதானத்துடனும் பாதுகாக்க வேண்டும். பட்டியலை வாங்கும் அதிகாரியே, இதனை ரகசியகாம பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் CBDD உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் ரகசிய வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியை சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா பெற்று வருகிறது. அண்மையில் ஜேர்மனிய அரசிடமிருந்தும் பெற்றுக்கொண்டது. இதுவரை சுமார் 9,900 தகவல்களை இவ்வாறு பெறப்பட்டுள்ளது.

பிளாக் மெயில், பேரம்பேசுதல் என ஆபத்தான நோக்கங்களுக்காக இப்பட்டியல் கசிந்தாலோ அல்லது வெளிநாடுகளில் சட்டவிரோதமாக கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் யாரென பகிரங்கமாக பெயர்கள் வெளியானாலோ, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புக்களிடமிருந்து இந்திய அரசு தொடர்ந்து ரகசிய தகவல்களை பெற்று வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இப்பட்டியலை பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: