இஸ்ரேல் நாடு இனவெறி பிடித்த நாடு, அந்த நாடு இருக்கவே கூடாது என்று பேசிய கனடாவின் கியூபெக் மாகாணத் தலைவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட காலணிகளைப் மொண்ட்ரியலில் உள்ள ஒரு கடை புறக்கணிப்பதை ஆதரித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியை நடத்தியகெண்ட்ரோன் ஆமோதித்து தெரிவித்த
கருத்தை எதிர்த்து யூத உரிமைக் குழுக்கள் ஆறு முறையீடுகளை கனடா ஒளிபரப்புத் தரக்குழுவுக்கு(Canadian Broad cast Standards Council) அனுப்பிவிட்டன.
இந்தக் குழுவின் தலைவரான ஜான்மெக்நாப் இந்நிகழ்ச்சி குறித்துப் பேசும் போது, நம்முடைய சமூகத்தின் ஒரு பகுதியாகவே சமயக் கருத்துகள் குறித்த அரசியல் விவாதம் அமைந்துள்ளது என்றாலும் அந்த விவாதம் மரியாதை தவறாமல் நடத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த விவாதம் சரியாகத்தான் நடந்திருக்கிறது. தரக்குறைவான வார்த்தைகளோ பாரபட்சமான கருத்துகளோ வெளியிடும் போது தான் அது எங்களுக்குப் பிரச்னையாகி விடுகிறது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக