தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.1.12

முஸ்லீம் குழுக்களால் வீடியோ கான்பரன்ஸ் ரத்தானது அச்சமளிக்கிறது : சல்மான் ருஷ்டி

புது தில்லி : ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல் மான் ருஷ்டி பங்கேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீடி யோ கான்பரன்ஸ் மூலம் பேசுவதாக இருந்ததும் முஸ்லீம் குழு க்களின் எதிர்ப்பால் ரத்தானது அச்சமளிக்கும் சூழல் என்று சல் மான் ருஷ்டி கூறியுள்ளார்.ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே முஸ்லீம்களின் உணர்வுகளை

புண்படுத்தும் வகையில் சாத்தானின் கவிதைகள் எனும் புத்தகம் எழுதியதால் அப்புத்தகம் தடை செய்யப்பட்டது. எனவே அவரை இவ்விழாவில் அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு எழுந்தது.

சல்மான் ருஷ்டியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக உள்துறை சொன்ன தகவலை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் அவர் தன் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். தான் விழாவுக்கு வர கூடாது என்பதற்காகவே ராஜஸ்தான் மாநில காவல்துறை பொய் சொல்லியுள்ளதாக ருஷ்டி கோபப்பட்டார்.

இச்சூழலில் ருஷ்டி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அரங்கத்தினுள் எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம் குழுக்களால் சேதம் ஏற்படலாம் என்று கருதியே ருஷ்டியின் வீடியோ கான்பரன்ஸ் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ருஷ்டியின் முகத்தை பார்க்கவே விரும்பவில்லை என்று அங்கிருந்த எதிர்ப்பாளர்கள் தெரிவித்தாக கூறிய ஏற்பாட்டாளர்கள் இந்நிகழ்ச்சி ரத்தானதற்கு வேதனை தெரிவித்தனர். முஸ்லீம் குழுக்களின் இச்செயல் பேச்சு சுதந்திரத்தை முறிக்கும் செயல் என்று குறிப்பிட்ட ருஷ்டி இச்சூழல் அச்சமளிக்கிறது என்றார்.

0 கருத்துகள்: