தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.1.12

சூரிய புயல் இன்று பூமியை தாக்கியது


கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலை கள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இ தனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்ட ன.சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்ற ங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைக ளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின்
மேற்புறம் அமைதியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி, சூரியனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர்வலை, ஒரு மணி நேரத்தில் பூமியைத் தாக்கியது. தற்போது, அதைவிட சக்தி வாய்ந்த சூரியஅதிர்வலை, இன்று, பூமியைத் தாக்கும் என, “நாசா’ தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல், மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். இந்த கதிர்வீச்சுகளினால், பூமியின் மேற்புறத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம்,சற்று பாதிக்கப்படலாம். பூமியின் சில பகுதிகளில் மின்சாரத் தொகுப்பு நிலையங்கள் பாதிக்கப்படலாம். எனினும், கடந்த 1989ல் நிகழ்ந்த சூரிய அதிர்வலையைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும் எனவும், அது பூமியின் வடதுருவத்தில் தான் அதி களவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்கா நேரப்படி செவ்வாய் காலை 10 மணியளவில்(ஜி.எம்.டி., நேரப்படி 15.00) மணியளவில் சூரிய புயல் பூமியை தாக்கியது. இது கடந்த அக்டோபர் 2003ம் ஆண்டை காட்டிலும் ஏற்பட்ட சூரிய புயலை விட அதிகம் என நாசா கூறியுள்ளது. மேலும், சூரிய புயலில் வரும் கதிர்வீச்சு மனிதனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியது. இந்த கதிர்வீச்சுக்கள் புதன்கிழமை வரை இருக்கும் எனவும், இதனால் விண்வெளி தொடர்பு, விமான போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என நாசா கூறியுள்ளது. கதிர்வீச்சு குறையும் வரை விமான போக்குவரத்து கண்காணிக்கப்படும்.

0 கருத்துகள்: