தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.1.12

ஹோஸ்னி முபாரக்கிற்கு மரணதண்டனை விதிக்க கோரி நீதிமன்றத்தில் கோரிக்கை!

எகிப்தில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின் போது, அப்பா வி பொதுமக்களை படுகொலை செய்ய உத்தரவிட்டது முன்னாள்அதிபர் ஹோஸ்னி முபாரக் தான் எனவும், அவருக்கும் அவரது நெருங்கிய செயற்பாட்டாளர்களு க்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் எனவு ம் எகிப்திய நீதிம்னறத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த வருடம் ஹோஸ்னி முபாரக்கிற்கு
எதிரான மக்கள் புரட்சியின் 18வது நாள் போராட்டத்தின் போது, இடம்பெற்ற படுகொலைகளுக்கு, அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் ஹோஸ்னி முபாரக்கே பொறுப்பு கூறவேண்டும். மக்கள் படுகொலை செய்யப்படுவது தெரிந்தும் அதனை தடுத்து நிறுத்தவில்லை. அவர்களை நினைத்து, முபாரக் பெரிதும் அச்சப்பட்டார். முபாரக்கின் உத்தரவின் பெயரிலேயே, பாதுகாப்பு அமைச்சர் ஹபிப் எல் அட்லி, ஆர்ப்பாட்ட காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இராணுவத்தினருக்கு கட்டளையிட்டுருப்பார் என வழக்கறிஞர் முஸ்தபா சுலைமான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கெய்ரோ நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சியமளிக்கையிலேயே முஸ்தபா இவ்வாறு தெரிவித்தார்.

முபாரக் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சின் தலைவர் ஹபிப் எல் அட்லி மற்றும் ஆறு காவற்துறை உயரதிகாரிகள் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றசாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் முபாரக்கின் மகன்களான அலா மற்றும் காமல் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: