பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனிமேல் ஆண் பணியாளர்களை அமர்த்தக்கூடாது என்றும் பெண்கள் மட்டுமே அங்கு பணிபுரிய அமர்த்தப்படவேண்டும் என சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என தனிப்பட்ட பல சட்டங்கள் உண்டு. எம்மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அங்கு பர்தா அணிந்தே வெளியே நடமாடவேண்டும். பெண்கள் தனியாக கார் ஓட்ட அனுமதியில்லை. இதுபோன்ற பெண்களுக்கான தனிப்பட்ட சட்டங்கள் உண்டு.
இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் பெண் பணியாளர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
சவூதி அரேபிய அரசின் இந்த உத்தரவுக்குப் பின்னர் சுமார் 30,000 பெண்களிடமிருந்து பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை நிலையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சவூதி அரேபிய அரசின் இப்புதிய உத்தரவு பலதரப்பு மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக