ஈரான் பிரச்சனை தெற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமே பாரிய பிரச்சனையாகப் போவதாக சற்று முன்னர் வெளியான ஐரோப்பிய செய்திக ள் தெரிவிக்கின்றன. சிறப்பாக ஆயில் விலை 50 வீதம் அதி ரடியாக உயரக்கூடிய பேரபாயம் உள்ளதாக நியூயோர் க் டைம்ஸ் எச்சரித்துள்ளது. அப்படியொரு நிலை வருமாக இருந்தால் இன்றய பொருளாதார நெருக்கடியில் மீள முடி யாத பேரவலத்திற்குள் உலகம் சிக்குண்டு போகும் என்பதும் தெரிந்த விவகாரமே. ஈரான் அணு குண்டை
செய்யும் முயற்சியை நிறுத்தாவிட்டால் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தை உறை நிலைக்கு கொண்டுவந்து, செயற்பட முடியாதவாறு செய்வோம் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் வெடித்துள்ளது.
ஈரான் மீது தடை விதித்தால் ஹார்மூஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தை ஈரான் தடுக்கும். உலகத்தின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி இந்த வழியினாலேயே நடைபெறுகிறது.
வெறுமனே 30 கி.மீ நீளம் கொண்ட ஹார்மூஸ் நீரிணையே பாரசீகக்குடாவின் எண்ணெய் ஏற்றுமதிக் கப்பல்கள் செல்லும் ஒரே வழியாகும். ஈராக், குவைத், சவுதி அரேபியா, கட்டார், அரபு எமிரேய்ட்ஸ் போன்ற நாடுகளின் எரிபொருள் – எரிவாயு யாவும் இந்தக் குறுகலான வழியினாலேய ஏற்றுமதியாகின்றன. இந்த வழியை ஈரானிய படைகள் தடுத்து, தாக்குதல் நடாத்தத் தயாரானால் போதும் இரண்டொரு நாட்களில் ஓயில் விலை கடகடவென ஏறி 50 வீத உயர்வையும் தாண்டிவிடும் என்று சர்வதேச ஊடகங்கள் எழுதியுள்ளன. தற்போது பெருமெடுப்பிலான அமெரிக்க போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடாவிற்குள் புகுந்துள்ளன. எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்த முயற்சி என்று தெரிவிக்கப்படுகிறது. இதை ஈரான் மீறினால் அமெரிக்கா தாக்கும், அதனால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.
உலக சந்தைக்கு போகும் ஓயிலில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியினாலேயே போகிறது. மேலும் இந்தியா – சீனா உட்பட ஆசிய நாடுகளுக்கு போகும் 85 வீதமான ஓயில் இந்த வழியினாலேயே போகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது… அமெரிக்க போர்க்கப்பல்கள் பாகரினுக்கு அருகாமைவரை போய்விட்டன… மேலும் ஈரானிய எண்ணெய் வயல்களில் மிகப்பெரிய முதலீட்டை சீனா செய்துள்ளது. ஈரான் மீது விதிக்கப்படும் தடை மறைமுகமாக சீனாவுக்கு விழும் அடியாக அமையும் என்பதும் கவனிக்கத்தக்கது. வடகொரியாவில் தனது கையாளை நியமிப்பதில் வெற்றி கண்ட சீனாவுக்கு பதிலடி ஈரானில் விழப்போகிறது. ஒவ்வொரு வினாடியும் பரபரப்பாக உருண்டு கொண்டிருக்கிறது… இதற்கிடையில் இன்று உலக சந்தையில் ஒரு பரல் ஓயிலின் விலை 114 டாலர்களாக எகிறியுள்ளது. இரு தரப்பும் அர்த்தமில்லாத பதட்டத்தில் குதித்துள்ளதாக சில மத்திய கிழக்கு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரானிய போர்க்கப்பல்கள் நீரிணையை தடுக்கும் பயிற்சியை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. அதற்கான புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக