தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.1.12

பதவி விலகிய ஏமன் அதிபர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்


ஏமன் நாட்டின் அதிபராக அலிஅப்துல்லா சலே கடந்த 33 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக அந் நாட்டு மக்கள் 11 மாதங்களாக போராட்டத்தி ல் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து நடந்த ராணுவ தாக்குத லில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பலியானார்கள். எ னவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக் கா மற்றும் வளைகுடா நாடுகள் தீவிர முயற்சி கொண்ட ன.அதையடுத்து அதிபர் பதவியில் இருந்து சலே
விலகி னார். கடந்த ஜூன் 3-ந் தேதி அரண்மனைக்குள் உள்ள மசூதியில் பிரார்த்தனை யில் ஈடுபட்ட போது நடந்த குண்டு வெடிப்பில் சலே படுகாயம் அடைந்தார். அதற்கான மேல் சிகிச்சை பெற நேற்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். அதற்கு முன்னதாக அவர் அரசு டெலிவிஷனில் இறுதி உரை நிகழ்த்தினார். அப்போது, தனது 33 ஆண்டு கால ஆட்சியில் நடந்த தவறு களுக்கு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
மேலும், போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்தார். தற்போதைய துணை அதிபர் அப்ட்ராபு மன்சூர் ஹாடி அதிபர் பொறுப்பு வகிக்கிறார். அதற்கான ஒப்புதலை பாராளுமன்றம் கடந்த சனிக்கிழமை வழங்கியது. மேலும் புதிய அதிபர் ஜனநாயக முறையில் தேர்ந் தெடுக்கப்படுவார் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் சலே கூறினார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பும் நான் அதிபராக இங்கு வரமாட்டேன் ‘பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவேன்’ என்றும் உறுதி அளித்தார். பதவி விலகிய அதிபர் சலேவுக்கு வழக்கில் இருந்து அந்நாட்டு பாராளுமன்றம் விதிவிலக்கு அளித்துள்ளது.

0 கருத்துகள்: