ரஷியாவின் நெர்பா ரக அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலை, இந்திய கடற்படை 10 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த கப்பலிற்கு மொத்த குத்தகை தொகையாக 900 மில்லியன் டாலர்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் ரஷ்ய தூதர் அஜய் மல்கோத்ரா கலந்து கொண்டார். அவரிடம் நெர்பா ரக அணு ஆயுத நீர்மூழ்கி
கப்பல் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். சக்ரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கப்பல் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். சக்ரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் இயக்கும் நாடுகளின் பட்டியலில் 6-வது நாடாக இடம்பெறும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக