தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.1.12

அதிகாரத்தை ஜனாதிபதியின் கையில் ஒப்படைக்க சிரிய அதிபர் மறுப்பு

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்து சென் ற வாரம் கருத்து வெளியிட்ட அரபுலீக் சிரிய அதிபர் தன து நாட்டை கொண்டு நடாத்தும் வலுவை இழந்துவிட்டா ர் என்றும் அங்கு ஆயுதக்குழுக்களின் பரவல் வேகமாக அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து எகிப்திய தலைநகர் கெய்ரோவில் கூடிய அர புலீக் வெளிநாட்டு அமைச்சர்கள் குழுவினர் புதிய திட்ட மொன்றை தயாரித்து வழங்கியிருந்தனர்.
இதன்படி சிரி ய அதிபர் பாஸார் அல் ஆஸாட் சுமார் இரண்டு மாத காலப்பகுதிக்குள் தன்னுடைய அதிகாரங்களை உப ஜனாதிபதியின் கையில் கொடுத்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதிகார மாற்றத்திற்கான திட்ட வரைபும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சர்வாதிகாரி ஆஸாட் அதற்கு அடியோடு மறுத்துவிட்டார். ஒரு நாட்டின் இறைமைக்குள் தலையிடும் தேவையற்ற செயல் இதுவென்று வன்மையாகக் கண்டித்து அந்த யோசனையை நிராகரித்துவிட்டார். ஆகவே கேணல் கடாபியைப்போல வன்முறை மூலம் பதவியில் இருந்து இறக்கப்பட வேண்டிய அவலமான புள்ளிக்குள் விவகாரத்தைத் தள்ளியுள்ளார். இதன் காரணமாக இப்போது ஈரானில் போர் வெடிக்குமா இல்லை சிரியாவில் ஆரம்பிக்குமா என்பதே சுவாரஸ்யமான கேள்வியாக மாறியுள்ளது. அதேவேளை இந்த உலக நிகழ்வுகளை அவதானிக்காமல் சிறீலங்கா அரசு தமிழர் விவகாரத்தில் காட்டும் அசமந்தப் போக்கு அவர்களையும் இதுபோன்ற ஆபத்தான பொறியில் சிக்க வைத்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது. உலகத்தின் அவதானிப்பில் இல்லை என்று கருதி சிறீலங்கா காலம் கடத்துவது தப்பானது. சீனாவின் முழுமையான ஆதரவைப் பெற்ற ஈரானுக்கு நடக்கும் அவலத்தை அவதானித்து புதிதாக காய்களை நகர்த்துவதே புத்திசாலித்தனமானது. தமிழர்களுக்கான தீர்வை வழங்குவதால் யாதொரு பாதிப்பும் ஏற்படாது. தமிழர்களுக்கு தீர்வை வழங்கி உலகத்தின் கவனத்தை தமிழர் பகுதிக்கு திசை திருப்பினால் சிங்களப் பேரினவாதத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பாக அமையும்.

0 கருத்துகள்: