தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.1.12

அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்புக்கள்


உலக அளவில் நடக்கும் அனைத்துவகையான கருக்க லைப்புகளிலும் சரிபாதியானவை முறையான மருத்து வக் கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பற்ற கருக்கலைப் புக்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறிக் கை ஒன்று தெரிவிக்கிறது.இப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களில் பெரும்பாலனவை ஆப்ரிக்கா ம ற்றும் ஆசிய கண்டங்களைச்சேர்ந்த வளர்ந்துவரும் நா டுகளில்
நடப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் நடக்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களில் ஏறக்குறைய பாதியளவு ஆப்ரிக்க பிராந்தியத்தில் நடப்பதாகவும் உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகிறது.
தேர்ச்சி பெற்ற மருத்துவ கண்காணிப்பு இல்லாமல், மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களுக்கு வெளியே செய்யப்படும் அனைத்துவகையான கருக்கலைப்புகளுமே பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களாகவே கருதப்படுகின்றன. அந்த அளவுகோளின்படி பார்த்தால், ஆப்ரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் நடக்கும் எல்லா கருக்கலைப்புக்களுமே பாதுகாப்பற்ற ஆபத்தான கருக்கலைப்புக்களாகவே கருதப்படுகின்றன. உலக அளவில் ஏற்படும் கர்பகால பெண்கள் இறப்பில் 13 சதவீதம் இந்த இரண்டு பிராந்தியங்களில் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது விஷயத்தில் ஆப்ரிக்காவில் நிலைமைகள் மிகமோசமாக இருக்கின்றன. முறைகேடான கருக்கலைப்பின் போது ஆண்டு தோறும் இறக்கும் நாற்பத்து ஏழாயிரம் பெண்களில், இருபத்து ஒன்பதாயிரம் பெண்கள் ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கடந்த பத்து ஆண்டுகளாக படிப்படியாக குறைந்துவந்த கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை தற்போது ஒருவித தேக்க நிலையை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள். கருத்தடை முறைகளை கடைபிடிக்கும் போக்கு பரவலாக குறைந்திருப்பது தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.கருக்கலைப்பு சட்டவிரோதமாக திகழும் நாடுகளில் தான் கருக்கலைப்புக்களின் அளவும் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் கருக்கலைப்பை சட்டபூர்வமானது என்று அங்கீகரித்ததன் விளைவு, கருக்கலைப்புக்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களின் ஆரோக்கியம் மேம்படுவதற்கும் இது வழிவகுத்திருக்கிறது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவுக்கு தலைமை வகித்த நியூ யார்க்கில் இருக்கும் குட்மசெர் நிறுவனத்தை சேர்ந்த கில்டா செட்ஜ்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் குறித்தும் இந்த ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 1990 களில் அந்த நாடுகளைச்சேர்ந்த பெண்களில் 9 சதவீதம் பேர் ஆண்டுதோரும் கருக்கலைப்பை செய்துகொண்டிருந்தனர். 2003 ஆம் ஆண்டுவரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துகொண்டிருந்தது. ஆனால் 2003 ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்த சரிவு நின்றுபோனது. விளைவு, மேற்கு ஐரோப்பிய நாடுளைவிட, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நான்கு மடங்கு அதிகமாக கருக்கலைப்புக்கள் நடக்கத்துவங்கியிருக்கின்றன. இது நல்லதல்ல என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

0 கருத்துகள்: