தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.1.12

இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும்.பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி


இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது சர்கோசிபேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத
சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும் என்று எச்சரித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி ஈரான் மீது இஸ்ரேல் போருக்குத் தயாராகி வருகிறது.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை எதுவும் தீரப்போவதில்லை. மாறாக உலகம் முழுக்க, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும் குழப்பமும் உருவாகும் என்றார்.
மேலும் ஈரானின் எண்ணெய் இறக்குமதியைத் தடைசெய்தும், ஈரானிய மத்திய வங்கியின் சொத்துகளை முடக்குவதுமான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜக்கிய நாடுகள் முன்வர வேண்டும்.
சீனாவும், ரஷ்யாவும் ஜ.நா பாதுகாப்புக் குழு ஈரான் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

0 கருத்துகள்: