கெய்ரோ, ஜன. 4- எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் ஆட்சி அகற்றப்பட்டதை அடுத்து ராணுவம் நிர்வாக பொறுப்பை ஏற்றது. பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்ப ட்டு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. என்றாலும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.இந்த நிலையில் இறுதிகட்ட
பாராளுமன்ற தேர்தலை முன்
கூட்டியே நடத்தி முடித்து பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி மார்ச் 12-ந் தேதி நடைபெற இருக்கும் தேர்தல் பிப்ரவரி 22-ந் தேதியே நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் பிப்ரவரி 28-ந் தேதி பாராளுமன்ற முதல் கூட்டம் நடைபெறும். இந்த தகவலை ராணுவ கவுன்சில் ஒரு அறிக்கை மூலம் வெளியிட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக