தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.1.12

தேசியக்கொடி அவமதிப்பு-அன்னா ஹசாரேக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!


அன்னா ஹசாரே சென்னைக்கு வந்தபோது, சேத்துப் பட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை முறைகேடாக பயன்படுத்தினர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் என்.ஜான் செல்வராஜ், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை அவமதிப்பவர்களை அந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்க முடியாமல் இருந்தது. எனவே 2003-ம் ஆண்டில் அந்தச் சட்டம் திருத்தி அமைக்கப் பட்டது. அதன்படி, தேசிய கொடியை அவமதித்தால் அந்த நபருக்கு அபராதமோ, அல்லது 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையோ, அல்லது 2 தண்டனைகளையும் சேர்த்தோ விதிக்கலாம்.

தற்போது ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராடி வருகிறார். ஊழலுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டத்துக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் மூவர்ண தேசியக்கொடி அவமதிக்கப்படுகிறது.தேசிய கொடியை பறக்கவிடுவது, வெளிக்காட்டுவது போன்ற செயலை ஒழுங்குபடுத்துவதற்கென்று இந்திய தேசியக்கொடி விதிகள் 2002 என்ற விதிகள் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் அவரது கூட்டங்களில் மீறப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் 18-ந் தேதி அன்னாஹசாரே சென்னை சேத்துப்பட்டில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தேசியக்கொடி தவறாக பயன்படுத்தப்பட்டது. சிலர் அதை பெட்சீட் ஆகவும், சிலர் அதை கர்சிப் ஆகவும், சிலர் அதை குளிருக்கான சால்வையாகவும் பயன்படுத்தினர்.தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதை அடுத்து நான் மத்திய உள்துறை மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு தந்தி மூலம் டிசம்பர் 19-ந் தேதி புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

0 கருத்துகள்: