தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.9.12

போருக்கு ஆயத்தமாகின்றனவா ஈரான் - இஸ்ரேல்? : அமெரிக்க, பிரிட்டன் கடற்படை பேர்சியன் வளைகுடாவில்!


ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை தொடுப்பதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்திருப்பதன் மூலம் மத்திய கிழக்கு நாடுக ளில், ஆயுதச் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருவதாக இஸ்ரேல் உட்பட பல நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவு வதற்காகவும், ஈரானை கண்காணிப்புக்காகவும், பேர் சியன் வளைகுடாவுக்கு பிரிட்டன் மற்றும்

அமெரிக்க கடற்படைகள் தமது போ ர்க்கப்பல்களையும் அனுப்பியுள்ளன. விமானம் தாங்கிக் கப்பல், கடல் மிதி வெடிகள் (Minesweepers), மற்றும் 25 நாடுகளில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல்கள் என்பன இவற்றில் உள்ளடங்குகின்றன.

இஸ்ரேல், ஈரானின் அணு உலைகளைக் குறி வைத்துத் தாக்குதலை நடத்துமானால் பதிலடியாக ஈரான் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்கும் தாக்குதலையும் மேற்கொள்ளத் தயங்காது என மேற்குலகத் தலைவர்கள் இடையே அச்சமும் எழுந்துள்ளது. இஸ்ரேல் ஒரு நாளைக்கு 18 மில்லியன் பரெல் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது.
உலகளவில் 35% வீதம் பெற்றோலியம் கடலுக்கடியில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற போதும், ஈரானின் பெற்றோலிய வளத்தை பகைத்துக்கொள்ளை அந்நாடுகள் விரும்பாதுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: