தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.9.12

அமெரிக்க திரைப்படத்தால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க லெபனான் விரையும் போப்.


மூன்று நாள் சுற்றுப்பயணமாக போப் 16-வது பெனடிக்ட் வெள்ளிக்கிழமை லெபனான் சென்றடைந்தார்.அமெரிக்காவில் முஸ்லிம் குறித்து எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படத்துக்கு முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. லெபனானிலும் அத் திரைப்படத்துக்கு முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், லெபனானில் உள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அந்நாட்டு
முஸ்லிம் தலைவர்களை போப் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

லெபனான் சென்றடைந்த போப், முதலில் அதிபர் மிச்செல் ஸ்லெய்மனை (கிறிஸ்தவர்) சந்திக்க உள்ளார்.

முஸ்லிம் தலைவர்களைச் சந்திக்கும்முன் அந்நாட்டு பிரதமர் நஜிப் மிகாதியையும் (சன்னி பிரிவு), நாடாளுமன்றத் தலைவர் நபி பெர்ரியையும் (ஷியா பிரிவு) போப் சந்திக்க உள்ளார்.

லெபனான் நாட்டின் 3 உயர்ந்த பதவிகளும் 3 பிரிவினருக்கு என்பது எழுதப்படாத சட்டமாக அங்கு பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

போப்பின் லெபனான் வருகை, நாட்டுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்று அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர். மேலும் நாட்டில் இரு பிரிவு மக்களுக்கும் இடையே அமைதியான சூழல் உருவாகும் என்று கருதுகின்றனர்.


போப்பின் இந்த வருகை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையேயான இடைவெளியைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

0 கருத்துகள்: