தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.9.12

கராச்சி இந்து கோவிலை தகர்க்க வேண்டாம் : மனுவை ஒத்திவைத்தது பாகிஸ்தான் நீதிமன்றம்


பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று துறைமுக நகரமான கராச்சியில் உள்ள அதிகாரிகளிடம் அங்கு அமைந்திருக்கும் 200 வருடம் பழமையான இந்துக் கோயிலை அகற்ற அனுமதிக்க வேண்டும் என நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.சிந்த் உச்ச நீதிமன்றமே கராச்சியின் து றைமுக அமைப்பிடம் (Karachi Port Trust - KPT) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இடிக்கப்

படவிருந்த இந்துக் கோயில் பாகிஸ் தானின் தேசிய ஜெட்டி மேம்பாலத்துக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஶ்ரீ லக்‌ஷ்மி நாராயணர் கோயிலாகும்.

குறித்த இந்த கோயிலுக்கு பக்கத்தில் அமைந்துள்ள பாலம் மற்றும் அருகிலுள்ள பகுதி துறைமுகத்தை விரிவு படுத்தும் கட்டுமான வேலைகளுக்காகவே இக்கோவில் இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்தது. இதேவேளை இந்நடவடிக்கைக்கு எதிராக கைலாஷ் விஷ்ரம் எனும் நபர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் (Petition) கொடுத்துள்ளார்.

அதில் அவர் இந்தக் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு உரிமை கோருவதற்கு மிக முந்தைய காலத்திலேயே கட்டப்பட்டு விட்டதாகவும் அங்கு நீண்ட காலமாக இந்துக்கள் வழிபாடு மற்றும் சமயச் சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறியிருந்தார். மேலும் அது ஒரு புனிதமான இடம் எனவும் ஆனால் அதன் கடலோரத்தில் மரணச்சடங்குகள் கூட மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: