பிறிக்நாடுகள்என்றகுறியீட்டுசொற்களில்பிரேசில்,ரஸ் யா, இந்தியா,சீனா ஆகிய நான்கு நாடுகளும்இடம் பெறுகி ன்றன. மேலைநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக் குப்படஇந்தபிறிக் நாடுகள்பொருளாதாரத்தில் பாரிய வள ர்ச்சி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதற்கு அமை வாக இந்த நாடுகளும் பாரிய முன்னேற்றமடைந்து வந்த ன. சீனா அடைந்த முன்னேற்றம் உலகத்தை அதிசயிக்க வைத்தது.
அதுபோல இந்தியாவின் மேலதிக வருமானமு ம், பொருளாதார வளர்ச்சியும் பாரிய முன்னேற்றமடைந்தது. மேலும் பிரேசில் வேகமாக வளர்ந்து அமெரிக்காவை வீழ்த்தி ஆறாவது முக்கிய பொருளாதாரத்தை பிடித்தது. ஆனால் இப்போது நிலமை மறுபடியும் மாற்றமடைய தொடங்கியுள்ளது. பிறிக் நாடுகளில் முதலிட்ட மேலை நாடுகள் தற்போது அந்த முதலீடுகளை மெல்ல மெல்ல திருப்பப் பெற்று வருகின்றன. இதில் முக்கியமான நாடு இந்தியாவாகும். இந்தியாவில் போட்ட முதலீட்டை மேலை நாட்டு முதலீட்டாளர்கள் மெல்ல மெல்ல திரும்பப் பெற்று வருகிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் கடுமையான வீசா கட்டுப்பாடுகள், தமது நாட்டின் பொருளாதாரம் வெளியே செல்லக்கூடாதென்ற இறுக்கம் யாவும் அந்த நாட்டில் முதலிட விரும்ப முடியாத சூழலையே ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்திய பங்குச் சந்தை 24 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளமையும் வெளிநாட்டவரின் வெளியேற்றத்திற்கு அதி முக்கிய காரணமாகும். அடுத்து இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. வங்கிகள் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன. இதனால் விலை உயர்வு, தொழில்களை விருத்தி செய்ய முடியாத நிலை போன்ற மோசமான சூழல் உருவாகியுள்ளது. ஆகவே இந்தியாவை கை கழுவுவது நல்லது என்ற கருத்து நிலவுகிறது. மேலும் ரஸ்யாவின் ரூபிள் நாணயம் பெறுமதி இறங்கக் கூடிய அபாயம் தெரிவதால் அங்கிருந்தும் முதலீட்டாளர் வெளியேறுகிறார்கள். அடுத்து சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டதாகும். ஐரோப்பாவில் உள்ள பொருளாதார நெருக்கடி சீன இறக்குமதிகளை குறைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. ஆகவே சீன பொருளாதாரத்தின் எதிர்காலமும் நிச்சயமற்றுள்ளதால் ஐரோப்பிய முதலீட்டாளர் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இந்த பிறிக் நாடுகளில் தற்போது பிரேசில் மட்டும் உருப்படியான நிலையில் இருக்கிறதாக இன்றைய ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக