தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.1.12

நாசகார செயல் : ஈராக் போர் 162.000 பேர் மரணம் சிறீலங்கா 140.000 பேர்

ஈராக்கிற்குள் அணு குண்டைத் தேடிப்போன அமெரிக்க உட் பட நேசப்படைகளின் போர் நடவடிக்கையால் மடிந்த மக்க ளின் எண்ணிக்கை 162.000 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ள து. கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் 23 ம் திகதி ஈராக்கிற்குள் நு ழைந்த அமெரிக்கப் படைகள் சென்ற ஆண்டு அங்கிருந்து வெளியேறும்வரை நடாத்திய அழிவு இதுவாகும். மேற்படி தகவலை பிரிட்டனில் உள்ள பிரிட்டீஸ் குறூப் ஈராக் பொடி என்ற அமைப்பு நடாத்திய ஆய்வு

தெரிவிக்கிறது. இதில் 80 வீதமானவர்கள் பயங்கரவாதிகளோ ஆயுதம் தூக்கியவர்களோ அல்ல வெறுமனே அப்பாவி மக்கள் மட்டுமே என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கப் படைகள் 4474 பேர் மடிந்துள்ளனர், 9019 ஈராக்கிய போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் இதர நாட்டு படைகளும், இவர்களை எதிர்த்து போரிட்டவருமாவர். டேனிஸ் படைகளில் எட்டுப்பேர் நாடு திரும்பவில்லை. இந்தக் கொலைகளில் 90 வீதம் 2009 ம் ஆண்டுக்குள் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. சுமார் 170.000 அமெரிக்கப் படைகள் மொத்தம் 505 இராணுவ முகாம்களில் முகாமிட்டு இந்தப் போரை நடாத்தி மேற்கண்ட நாசகார செயலை புரிந்துள்ளார்கள் என்றும் அது பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டின் மோசமான படு கொலைகள் நடைபெற்ற இடம் பாக்தாத் ஆகும். இங்கு அரைப்பங்கு கொலைகள் நடை பெற்றுள்ளன. இதேபோல சிறீலங்காவில் 2009 ம் ஆண்டு மட்டும் 140.000 தமிழர்கள் சிங்கள இனவாத படைகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஈராக் போருடன் ஒப்பிட்டால் சிறீலங்கா அரசு நடாத்திய கொலைகள் பத்து மடங்கு அதிகமாகும் என்பது கவனிக்கத்தக்கது. இந்தத் தவறுகளுக்கு புதிய உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது. பரவாயில்லை இனி நல்ல பிள்ளைகளாக நடவுங்கள் என்று ஐ.நா செயலர் சொல்லப்போகிறாரா என்பதுதான் உலகின் எதிர்பார்ப்பு. அமெரிக்கப்படைகள் ஈராக்கிற்குள் அணு குண்டு இருப்பதாக போருக்குப் போயிருந்தன. அவர்கள் ஈராக்கில் யாதொரு அணு குண்டையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மடைத்தனமான போரினால் உலகை மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட வைத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. உலக அரசியல் தலைமைகள் மிகவும் தகுதி குறைந்தவர்களின் கைகளில் சிக்குண்டு தள்ளாடுகிறது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் எதுவும் வேண்டியதில்லை.

0 கருத்துகள்: