எகிப்து நாட்டின் அதிபராக இருந்த முபாரக் மக்கள் புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடினார். அவர் செங்கடல் அருகே உள்ள உல்லாச நகரான ஷர்ம் அல் ஷேக்கில் உள்ள ஒரு விடுமுறை மாளிகையில் தங்கி இருக்கிறார். அங்கு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. 82 வயதான அவர் சுயநினைவு இழந்த நிலையில் கோமாவில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த செய்தியை அரசு ஆதரவு பத்திரிகை ஒன்று மறுத்து உள்ளது. அவர் மிகுந்த
மன உளைச்சலில் இருப்பதாகவும், படுத்த படுக்கையாக இருப்பதாகவும், உடல் எந்த சிகிச்சையையும் ஏற்கவில்லை என்றும் அந்த பத்திரிகை கூறி உள்ளது.
இங்கிலாந்து பத்திரிகை டெய்லி டெலிகிராப், அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக செய்தி வெளியிட்டு உள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவுக்கான எகிப்து தூதர் சமே ஷோர்க்கி கூறுகையில், முபாரக்கின் உடல் நிலை மோசம் அடைந்து உள்ளது என்று தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக