மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என்று முதலமைச்சர் ஜெய லலிதா கூறியதாக நக்கீரனில் வெளியான செய்தியே அதிமுக வினரை ஆத்திரமடைய வைத்து, அதன் அலுவல கம் மீது தாக் குதலை நடத்த வைத்துள்ளது.சசிகலா போயஸ் தோட்டத்திலி ருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அ ண்மையில் நடைபெ ற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்திற் கு பின்னர் ஜெயலலிதா, கட்சியின் முன்னணி நிர்வாகிக ளை அழைத்து ஆலோசனைந டத்தியதாக கூறி, இன்று வெளியான நக்கீரன் வாரம் இருமு றை ஏட்டில் இடம்பெற்ற கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு
கூறப்பட்டிருந்தது. :“ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெயலலிதா, ”அதைப்பற்றி பேசாதீங்க.நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும், வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார்.
கூறப்பட்டிருந்தது. :“ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெயலலிதா, ”அதைப்பற்றி பேசாதீங்க.நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும், வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார்.
”இவங்க இரண்டு பேரும்,என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க.அதாவது நான் மாமியாம்.. என் கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்ஜிஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது.அப்ப அவர் என்ன சொன்றார் தெரியுமா?”என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு,அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா.
”நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது.எம்ஜிஆர் என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வர முடியாதுன்னும் சொல்லி,அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி,கட்சி நிர்வாகிகள் கிட்டே சொன்னார்.
அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டிஎஸ். போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு.அவரு, ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு.இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார்.
அப்ப எம்ஜிஆர் ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும்.
அப்புறம்,இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை.மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார்.
இன்னைக்கு கருணாநிதியும்,வீரமணியும் நான் பிராமின்னும் என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க”என்றபடி சிரித்திருக்கிறார்”
நக்கீரன் வெளியிட்ட மேற்கூறிய செய்தியே அதிமுகவினரை ஆத்திரமூட்டி, அந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்த வைத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக