உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் மீதுஉரி ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமை ப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது கு றித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், எம்.ஜி. ஆர். அவர்களுடைய புகழுக்கும் களங்கம் உருவாக்க வே ண்டும் எனும் தீய எண்ணத்துடன், இன்று வெளியான நக் கீரன் ஏட்டிலும், கடைகளில்
தொங்கவிடப்பட்ட நக்கீரன் வால்போஸ்டர்களிலும், ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்கும் வண்ணம், “அம்மா பீஃப் உண்பவர்” என்று முற்றிலும் உண்மைக்கு மாறான, ஒருகாலும் நடைபெறாத செய்தியை திட்டமிட்டு கெட்ட நோக்குடன் வெளியிட்டு உள்ளார்கள்.ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆர். கொள்கை பரப்புச் செயலாளராக நியமிப்பதற்கு எடுத்த முடிவிற்கு கே.ஏ.கே., எஸ்.டி.எஸ். மற்றும் நானும் எதிர்ப்பு தெரிவித்தோம் என்று முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியினையும், எங்கள் முன்னிலையில் “அம்மா பீஃப் உண்பவர்” என்று எம்.ஜி.ஆர். கூறினார் என்ற பொய்ச் செய்தியினையும் அவதூறாக வெளியிட்டு உள்ளார்கள்.
கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., நான் உள்ளிட்டோர், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக நியமிப்பதற்கு எந்தவித எதிர்ப்பையும் எக்காலத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் தெரிவித்ததே இல்லை.
எம்ஜிஆரும், ஜெயலலிதா பீஃப் உண்பவர் என்று ஒரு காலத்திலும் கூறியதுமில்லை.
கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., நான் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் கலந்து கொண்டதாக அவதூறாகவும், பொய்யாகவும் நக்கீரன் ஏட்டில் கூறப்பட்டுள்ள அப்படிப்பட்ட நிகழ்வு ஒரு போதும் நடந்ததே இல்லை.
எம்ஜிஆர் ஒருபோதும் பீஃப் உண்ணமாட்டார்.ஜெயலலிதாவும் ஒரு போதும் பீஃப் உண்ணமாட்டார். முதல்வர் ஜெயலலிதா சமையலில் ஈடுபடுவதே இல்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்க, ஜெயலலிதா சமைத்துப் போட்டார் என்ற செய்தி வெளியீடு விஷத் தன்மையும்,அவதூறும் நிறைந்தது.
ஜெயலலிதா,அவரது வீட்டிலேயே கொள்கை ரீதியாக ஒருகாலத்திலும் இதை அனுமதிப்பதே இல்லை.இவைதான் உண்மை நிலை.
இப்படிப்பட்ட நிலையில்,தீய நோக்கத்தோடு முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியினை திட்டமிட்டே அவதூறு பரப்ப வேண்டும் என்ற உணர்வுடன் வெளியிட்ட நக்கீரன் ஏட்டின் மீதும், அதன் உரிமையாளர், பப்ளிஷர்ஸ் மற்றும் எடிட்டோரியல் பொறுப்பாளர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக