இந்திய விமான படை அதிகாரிக்கு சீனா விசா வழங்க ம றுப்பு தெரிவித்ததை அடுத்து, பீஜிங்கிற்கு செல்லவிருந்த இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு தனது பயணத்தை இ டைநிறுத்தியுள்ளது. இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு 4 நாள் சுற்றுப்பயணமாக எதிர்வரும் ஜனவரி 10 ம் திகதி சீ னாவுக்கு செல்லவிருந்தது. 30 பேர் கொண்ட இக்குழு, பீஜி ங், நாஞ்சிங், ஷாங்காய் ஆகிய நகரங்களுக்குசெல்லவிரு ந்தது.எனினும்
அக்குழுவில் இடம்பெற்றிருந்த குழு தலைவர் பாங்கிங் (Panging) என்பவரது விசா விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ள சீன தூதரகம் விசா நிராகரித்தமைக்கான எந்தவொரு காரணத்தையும் கூறவில்லை. பாங்கிங் அருணாச்சல பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்கிங்கின் விசா நிராகரிப்பை அடுத்து, பிரதிநிதிகள் குழு தனது பயணத்ததை இரத்து செய்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவுக்கு இதே போன்று வருகை தந்திருந்த ஒரு சீன இராணுவ பிரதிநிதிகள் குழு, இந்தியாவுடன் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. இதையடுத்து, இரு நாடுகளும் சில இராணுவ பாதுகாப்பு வளங்களை பரிமாற்றம் செய்ய முன்வந்தன. கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ளவும் சம்மதித்திருந்தன.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தொடர்பான சர்ச்சையால், இந்திய விமானப்படை அதிகாரி (IAF Officer) க்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதா என எழுந்துள்ள சந்தேகம் இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் இதே போன்று வடக்கு இராணுவ கட்டளை தளபதியாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் சேவை புரிந்து வந்த Lt Gen B S Jaswal என்பவருக்கு சீனா விசா வழங்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக