தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.1.12

இஷ்ரத் போலி என்கவுண்டர்:விசாரணைப் பொறுப்பை ஏற்றது சி.பி.ஐ


அஹ்மதாபாத்:மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் மோடியின் போலீசாரால் கடந்த 2004-ஆம் ஆண்டு போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.இவ்வழக்கை முன்பு விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு
(எஸ்.ஐ.டி) வழக்கின் ஆவணங்களை ஹைதராபாத் மண்டல சி.பி.ஐ தலைவர் ஐ.ஜி வி.வி.லட்சுமி நாராயணனிடம் ஒப்படைத்தார். வழக்கு தொடர்பான உண்மையான வாக்குமூலங்கள், ஆதாரங்கள் உள்பட ஆவணங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைத்ததாக எஸ்.ஐ.டி அதிகாரி தெரிவித்தார்.
இஷ்ரத் உள்பட நான்கு அப்பாவிகள் மோடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் எஸ்.ஐ.டி விசாரணையில் போலி என்கவுண்டர் என தெரியவந்ததை தொடர்ந்து இவ்விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைத்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ 20 போலீஸார் மீது வழக்கு தொடர்ந்தது. அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் நடத்திய போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட 19 வயது இஷ்ரத் ஜஹானுக்கு தீவிரவாத தொடர்பு இல்லை என எஸ்.ஐ.டி தெளிவாக தெரிவித்திருந்தது.
News@thoothu

0 கருத்துகள்: