தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.12.11

அமெரிக்க படையினர் தாக்கினால், திரும்ப தாக்குங்கள்


இஸ்லாமாபாத், டிசம்பர்3- அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தினால், திரும்ப தாக்கவேண்டும், மேலிட உத்தரவுக்காகக் காத்திருக்கக்கூடாது என பாகிஸ்தான் இராணுவ தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அண்மையில் நேட்டோ படையினர்
பாகிஸ்தான் இராணுவ நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் கொந்தளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேட்டோ படையினர் தாக்கினால் திரும்ப தாக்க வேண்டும் என கயானி  பாகிஸ்தான் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
“ஆப்கானிஸ்தானுடனான எல்லைப்பகுதியில் நிலைகொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தை எதிரிகள் தாக்கினால்  திரும்ப தாக்கலாம்.அந்த எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என மேலிட உத்தரவுக்காகக் காத்திருக்க தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்து பலத்தையும் பயன்படுத்தி பதிலடி கொடுக்க வேண்டும்” என பாகிஸ்தான் இராணுவ தளபதி கயானி அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்: