தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.12.11

டேம் 999 படத்தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

முல்லை பெரியாறு அணை உடைவது போல் சித்தரிப்பட்ட காட்சிகளோடு டேம் 999 என்ற திரைப்படம் சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியானது. இதை தமிழிலும் டப் செய்து வெளியிட இருந்த நிலையில்,இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த படம் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து டேம் 999 படத்தின் இயக்குனரும் சினிமா
தயாரிப்பாளருமான ஷோகன்ராய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அணை உடைவதை பின்னணியாக கொண்ட காதல் கதைதான் டேம் 999 என்றும், அதற்கு தடை விதித்து இருப்பது வியப்பை அளிப்பதாகவும், சோஹன்ராய் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
"தணிக்கையின்போது அனுமதி வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்துக்கு தடை விதிப்பதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று கேள்வி எழுப்பியிருக்கும் அவர், அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடருவதை தவிரஎனக்கு வேறு வழி இல்லை” என அவர் கூறியிருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவில்லை.

0 கருத்துகள்: