லண்டன், டிசம்பர் 3- தங்கள் சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்க அரசாங்கங்களுக்குத் தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வரும் சர்வதேச தொலைத்தொடர்பு மென்பொருள் நிறுவனங்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையதள அதிபர் ஜூலியன் அசாஞ்ச் வெளியிட்டுள்ளார்.அல்காடெல்- சீமென்ஸ், நார்த்ராப் க்ருமென் உள்ளிட்ட உலகின் 160
முன்னணி தொலைத் தொடர்பு மென்பொருள் நிறுவனங்கள் பல நாடுகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளன. இதன்மூலம் மக்களின் கைத்தொலைபேசி உரையாடல்கள், இண்டர்நெட் வாய்ஸ் மெயில்கள், மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள், தேடல்களை அந்த நாட்டு அரசுகள் ஒட்டுக்கேட்டும், படித்தும் வருகின்றன.
முன்னணி தொலைத் தொடர்பு மென்பொருள் நிறுவனங்கள் பல நாடுகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளன. இதன்மூலம் மக்களின் கைத்தொலைபேசி உரையாடல்கள், இண்டர்நெட் வாய்ஸ் மெயில்கள், மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள், தேடல்களை அந்த நாட்டு அரசுகள் ஒட்டுக்கேட்டும், படித்தும் வருகின்றன.
இந்த ஒட்டுகேட்கும் மென்பொருள் தொழில்நுட்பங்கள் மூலம் பில்லியன் டாலர்களை இந்த நிறுவனங்கள் குவித்து வருகின்றன. ஆனால், இந்த தொழில்நுட்பங்கள் வழி தங்கள் நாட்டு மக்களையே உளவு பார்த்து, முடக்கி வருகின்றன.
குறிப்பாக பிரான்சை சேர்ந்த உளவு பார்க்கும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான அமிசிஸ், இந்த தொழில்நுட்பத்தை முன்னால் லிபிய அதிபர் கடாபியிடம் பல பில்லியன் டாலருக்கு விற்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமக்கு எதிராக செயல்படுபவர்களை கடாபி ஒடுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து உளவு பிரிவினருக்கு உதவும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கிய இந்த உளவு பார்க்கும், தொழில்நுட்ப மென்பொருள்கள் இப்போது உலகெங்கும் பல நாடுகள், அரசுகள், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வகையில் சமீபத்தில் எகிப்திலும் லிபியாவிலும் நடந்த மக்கள் புரட்சியின் போது, இராணுவ, உளவு பிரிவுகள் சூறையாடப்பட்டன. அப்போது தூக்கிவீசப்பட்ட பல பொருட்களில் இந்த உளவு மென்பொருள்கள் அடங்கிய குறுந்தட்டுகள், மற்றும் குறுந்தட்டு ரேம்களும் அடங்கும். இவையனைத்தும் விக்கிலீக்ஸ் கைவசம் சிக்கின. இதனைக் கொண்டு மேலும் உலகளவில் விசாரணை நடத்தி இந்த தகவல்களை திரட்டினோம் என்கிறார் அசாஞ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக