தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.11

டேனிஸ் படைகள் மீது மீண்டும் குற்றச்சாட்டு

ஈராக்கில் உள்ள டேனிஸ் படைகள் அங்கு கைதாகும் பயங் கரவாத சந்தேக நபர்களை முதிர்ச்சியடையாத ஈராக்கிய ப டைகளிடம் கையளித்து வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. இவ்விதம் ஒப்படைக்கப்படுவோரில் 10 க்கு 9 பே ரை ஈராக் படைகள் அடித்து, துன்புறுத்தி, பலரை கொலையு ம் செய்து முடித்துள்ளன. சந்தேக நபர்களை தகுதிக்குறை வான பேய்களிடம் ஒப்படைத்த குற்றச் செயலை டேனிஸ் படைகள் புரிந்துள்ளதாக சர்வதேச மனித
உரிமைகள் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கையளிக்கப்படும் சந்தேக நபர்களின் சட்ட உரிமைகள் குறித்து தாம் எச்சரிக்கை நடக்கும்படி ஈராக் படைகளிடம் தெரிவித்ததாகவும், இவர்களை ஒப்படைப்பதால் கிடைக்கும் விடை என்னவென்று வினவியதாகவும் டேனிஸ் படைத்துறை கூறுகிறது. ஆனால் இத்தகைய இமாலயத் தவறுகள் நடப்பது தெரிந்த நிலையிலேயே முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சோன்கேத மற்றும் கீற்றா லில்லலுண்ட் பெக் ஆகிய இருவரும் தத்தமது பதவிகளை பகட்டாக அலங்கரித்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. வழமைபோல இருவரும் தம்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்தாலும் மனித உரிமைகள் கழகம் கனவுலகில் சஞ்சரித்து இந்த அறிக்கையை வெளியிட்டிருக்க முடியாதென்பது கவனிக்கத்தக்கது. இது இவ்விதமிருக்க அடுத்த ஆண்டு ஆப்கானில் இருந்து 10.000 அமெரிக்கப்படை வீரர்கள் திருப்பி எடுக்கப்படவுள்ளனர். தற்போது அங்கு அமெரிக்கப்படைகள் 91.000 பேர் நிலை கொண்டுள்ளார்கள். எதிர்வரும் 2014ல் ஈராக்கில் இருந்து வெளியேறியது போல அமெரிக்கப்படைகள் ஆப்கானில் இருந்தும் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானில் 21 ம் நூற்றாண்டு முடியும்வரை அமெரிக்கா இருந்தாலும் நிலமை மாறாது என்பது உலகறிந்த விடயமே. 2014 ல் படைகளை விலத்தினாலும் இன்று விலத்தினாலும் நிலமை ஒன்றே.

0 கருத்துகள்: