நேபிடா, டிச. 25- ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்ம ரில், ஜனநாயகத்துக்காக போராடி வருபவர் ஆங்சான் சூ கி. இவர் கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான நாட்க ள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஆ ண்டு நவம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், அ ந்த தேர்தலை
புறக்கணித்ததற்காக, அவரது ஜனநாயக தேசிய லீக் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
புறக்கணித்ததற்காக, அவரது ஜனநாயக தேசிய லீக் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி. ஆவதற்கு ஆங்சான் சூகி திட்டமிட்டுள்ளார். எனவே, ஆங்சான் சூகி நேற்று தலைநகர் நேபிடாவுக்கு சென்றார். தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்ற அவர், தனது கட்சியை மீண்டும் முறைப்படி பதிவு செய்து கொண்டார். பாராளுமன்றத்துக்கு முதல்முறையாக சென்றார். சபாநாயகர் ஷ்வே மான், மேல்-சபை சபாநாயகர் கின் ஆங் மின்ட் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக