தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.11

பிரதமர் வருகை-கறுப்புகொடி போராட்டம்: சென்னையில் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது


பிரதமர் மன்மோகன்சிங் வருகை மற்றும் விஜயகாந் தின் கறுப்பு கொடி போராட்டம் காரணமாக, சென்னை யில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. கிண்டியில் இருந்து கவர்னர் மாளிகை வழி யாக அடையாறு செல்லும் சர்தார் பட்டேல் ரோட்டில் நேற்று இரவில் இருந்தே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதேபோல
அண்ணா சாலை தேனா ம்பேட்டை
பகுதியில் இருந்து கிண்டி நோக்கி சென்ற வாகனங்கள் வானவில் அருகே தி.நகர் வழியாக திருப்பி விடப்பட்டன.  
இதனால் அண்ணா சாலை மற்றும் தி.நகர் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது. அண்ணா சாலையில் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை அலுவலகங்களுக்கு சென்றவர்கள், கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களால் சரியான நேரத்துக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை.
வீடுகளில் இருந்து காலை 10 மணி வேலைக்கு புறப்பட்டவர்கள் மதியம் 12 மணி ஆன பிறகும்கூட அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.   பிரதமர் மன்மோகன்சிங் கவர்னர் மாளிகையில் இருந்து அடையாறு, பட்டினப்பாக்கம், கடற்கரை சாலை வழியாக விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு காரில் சென்றார்.
இதனால் இந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்ற நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிந்தது. 1 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவால் சென்னையில் இன்று 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

0 கருத்துகள்: