தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.12.11

பகவத் கீதைக்கு தடை கோரும் மனுவை நிராகரித்தது ரஷ்ய நீதிமன்றம்

பகவத் கீதைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரஷ்ய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ரஷ்யாவில் பழ மைவாத கிறிஸ்தவ குழு ஒன்று, பகவத் கீதையை வன்மு றை வாசகங்கள் கொண்டது என்று கூறி அதன் மீது தடை கோரி, சைபீரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது குறித்த தகவல் வெளியானபோது, அது இந்திய நாடாளும ன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.இதனைத் தொட ர்ந்து இப்பிரச்னை தொடர்பாக ரஷ்ய அரசின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றதோடு, தங்களது

ஆட்சேபத்தையும் தெரிவித்தது. 


அத்துடன் நேற்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கடாகின்னைத் தொடர்பு கொண்ட இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண ரஷ்ய அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவரும் உதவுவதாக உறுதியளித்தார் 

இந்நிலையில் பகவத் கீதைக்கு தடை கோரும் மனு மீது இன்று தீர்ப்பளித்த சைபீரிய நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

0 கருத்துகள்: