ஐரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகள் மிக வேகமாக பொ ருளாதார வளர்ச்சி அடைந்துவருவதாகவும், 2020ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தி யா ஐந்தாவது இடத்தை எட்டிப்பிடித்து விடும் எனவும் பிரித்தா னியாவை தளமாக கொண்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் (economic think-tank Centre for Economics and Business Research - CEBR) தெரிவித்துள்ளது. உலகின் பொருளாதார வளர் ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலை நேற்று
வெளியிட்ட குறித்த மையம், தற்போதைய நிலையில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் இந்தியா 10 வது இடத்தில் நிற்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் ஆறாவது இடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தை தற்போது பிரேசில் பிடித்துள்ளதையும் கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படாவிட்டால், அங்கு பொருளாதார வளர்ச்சி மேலும் 2% வீதம் அளவிற்கு சுருங்கலாம் எனவும் அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இனி வருங்காலத்தில் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் எனவும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே செல்லும் எனவும், குறித்த அய்வு மையத்தின் தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் 2010ம் ஆண்டுக்குரிய தகவல்களின் படி, உலகின் மிகப்பெரிய பொருளாதார வளம் கொண்ட நாடாக அமெரிக்காவும், அதை அடுத்து சீனா,ஜப்பான்,ஜேர்மனி,பிரான்ஸ், இங்கிலாந்து,பிரேசில்,இத்தாலி,இந்தியா,கனடா ஆகிய நாடுகளும் முதல் பத்து இடங்களை பிடித்திருந்தன.
CEBR அறிக்கை ஆய்வின் படி 2020 இல் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ்,இந்தியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் வர போட்டியிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக