தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.12.11

ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு

காங்கிரஸ் கட்சியின் 127 வது தொடக்க விழா சத்தியமூர் த்தி பவனில் இன்று நடைபெற்றது.இதையொட்டி தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கலந்து கொண்ட போது அவரிடம் ஹசாரேவின் போராட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளது கு றித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இள ங்கோவன் அன்னாஹசாரேவை இந்த வருட
தொடக்கத் தில் ஊடகங்கள்  பெரிதாக உருவகப்படுத்தின. அவரது நிஜ உருவம் இப்போது தெரிந்து விட்டது. அவர் இப்போது நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் வரவில்லை. ஆதரவும் இல்லை.
  சென்னையில் நடைபெறும்  போராட்டத்தில் 100 பேர் கூட கலந்து கொள்ளவில்லை. கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள்தான் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கின்றனர். அந்த வகையில்தான் ரஜினியும் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளதால்தான் ஹசாரே குழுவினரின் போராட்டத்துக்கு தனது திருமண மண்டபத்தைக் கொடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

அவருடன் இருப்பவர்கள் கறுப்பு பணவாதிகள். கருப்பு  பணத்தால் கட்டப்பட்ட  மண்டபத்தில் தான் அவருக்கு ஆதரவாக போராட்டம்  நடக்கிறது. ஹசாரே இப்போது காற்று போன பலூன் அவர் புஷ்வாணம் ஆகி விட்டார் என்பதுதான் புத்தாண்டின் இனிப்பான செய்தி. காங்கிரஸ் 50 ஆண்டுகள் விடுதலைக்காக போராடியது. 60 ஆண்டுகளுக்கு மேல் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது. காங்கிரசையும் மக்களையும் பிரிக்க முடியாது. இன்று ஜி.கே.வாசன் பிறந்த நாள். அவர் வயதில் என்னை விட இளையவர் என்றாலும் செயல்பாட்டில் மூத்தவராக இருக்கிறார் என தெரிவித்தார்.

இன்றைய சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: