தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.11.11

உனக்குத் தான் புள்ளையே இல்லையே பச்சோந்தி ராமதாஸ் திமிர் பேச்சு

எனக்கு மகன் இருக்கிறான். நான் அவனை அரசியல் வாரிசாக்கிவிட்டேன். ஆனால் உனக்கு தான் குழந்தையே இல்லையே என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகனை நக்கலடித்துள்ளார்.பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி மற்றும் காமராஜ் ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.


அப்போது அவர்கள்கூறியதாவது,பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும், வெளியேறவிருப்பவர்களும் சேர்ந்து புது கட்சி துவங்குவிருக்கிறார்கள். அதில் தான் பாமகவின் உண்மையான கோட்பாடுகள், கொள்கை இருக்கும்.
துவக்ககாலத்தில் கட்சி விவகாரங்கள் குறித்துப் பேச மருத்தவர் அவர்களின் தைலாபுரம் வீட்டிற்கு சென்றாலே, உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா, போய் உங்க வேலையைப் பாருங்கள் என்று எங்களை அன்புமணி திட்டுவார்.
அவர் திட்டுவது போதாது என்று அவரது மனைவியும் அவர் பங்கிற்கு திட்டுவார். அரசியல் மீதும், பாமக மீதும் அவர்களுக்கு உண்மையான ஈடுபாடே கிடையாது. கட்சியில் அன்புமணியின் அதிகாரம் எப்பொழுதும் ஓங்கியிருப்பதற்காக அவரை அரசியல் வாரிசாக திணித்தார் ராமதாஸ்.
படித்துவிட்டு சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். அவரை அனைவரும் சின்னஅய்யா என்று தான் அழைக்க வேண்டும் என்றார். நாங்களும் அவ்வாறே அழைத்தோம்.
நேரம் பார்த்து மகனை அமைச்சராக்கினார். அன்புமணியை அரசியல் வாரிசாக ஏற்க மறுக்கும் தலைவர்களை கட்சியை விட்டே வெளியேற்றுகிறார் ராமதாஸ்.
கட்சியில் அன்புமணியின் அதிகாரம் தூள் பரப்பதால் தான் கடந்த தேர்தலில் பாமக தோல்வியடைந்தது என்று வேல்முருகன் கடந்த பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
அதற்கு ராமதாஸ், எனக்கு மகன் இருக்கிறான். அதனால் அரசியலுக்கு வந்துள்ளான். உனக்குத் தான் குழந்தையே இல்லையே. அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று வேல்முருகனுக்கு குழந்தை இல்லாததை அனைவர் முன்பும் கூறி இழிவுபடுத்தினார். இந்தப் பேச்சைக் கேட்ட வேல்முருகன் அங்கிருந்து கண்ணீரோடு வெளியேறினார்.
கட்சி்க்காக உயிர் கொடுத்தவர்களை எல்லாம் மறந்துவிட்டு கட்சியை குடும்ப சொத்தாக்கிக் கொண்டுள்ளார் ராமதாஸ். பாமகவில் இருந்து வெளியேற சிலர் நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த பிறகு புதிய கட்சி துவங்கப்படும் என்றனர்.

0 கருத்துகள்: