தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.11.11

உலக பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் - பேராசிரியர் பீரிஸ்


இலங்கையில் பெரும்பான்மை பெளத்த மக்களுடனும், இந்துக்களுடனும் முஸ்லிம்கள் சமாதானமாகவும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். மகத்தான மத சகிப்புத்தன்மையுடனும், தமக்குள்ளான நல்லெண்ணத்துடனும் இங்கு மக்கள் சமூகம் வாழக் கிடைத்தமை பாக்கியமாகும். பிரதமர் தி. மு. ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

உலக முஸ்லிம் காங்கிரஸ¤ம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையமும் ஏற்பாடு செய்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்து பேசுகையில்:-

முஸ்லிம்கள் இலங்கையில் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளனர். நாட்டில் குடியேற்றங்களை உருவாக்கிய அரபு வர்த்தகர்களுக்கு பெளத்த மன்னர்கள் காணிகளையும் புகலிடங்களையும் வழங்கியமை வரலாற்றுப் பதிவாகும். 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் முஸ் லிம்கள் போர்த்துகீசராலும், ஒல்லாந்தர் களாலும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்ட போது மலையகத்தின் பெளத்த மன்னர்கள் முஸ்லிம்களுக்கு குடியிருப்புக்களையும், வசதிகளையும் வழங்கினர்.

நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும் முஸ்லிம் தலைவர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர். கலாநிதி ரி.பீ. ஜாயா, சேர் ராசீக் பரீத், ஏ. அஸஸ் போன்ற அரசியல் தலைவர்களின் பணிகள் மகத்தானவை.

சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு முஸ்லிம்கள் அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை நல்கியுள்ளனர். முப்பது வருட பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து இலங்கை அமைதியும், சமாதானமும் கண்டுள்ள ஒரு நிலையில் இம் மாநாடு இலங்கையில் நடப்பது பாராட்டத்தக்கதாகும். இம்மாநாடு சகல வழிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப் பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தமது உரையில், இஸ்லாத்தின் உயரிய தத்துவங்கள் முழு உலகுக்கும் மகத்தான உதாரணங்களாகும். இன்று உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் என்றார்.

உலக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் செனட்டர் ராஜா முஹம்மத் ஸபருள்ஹக், சூடானின் முன்னாள் ஜனாதிபதி பீல்ட் மார்ஷல் அப்துல் ரஹ்மான் ஸொஸார் அல் டஹாப், உலக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கலாநிதி அப்துல்லா பின் உமர் நப் ஆகியோரும் உரையாற்றினர்.

0 கருத்துகள்: