தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.11.11

அமெரிக்க அவமரியாதை குறித்து அப்துல் கலாம் கருத்து


நியூயார்க் விமானநிலையத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிற்கு நடத்தப்பட்ட சோதனைக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்றும் முக்கியமான விசயமில்லை, மறந்துருங்க, மறந்துருங்க, பேசுமளவுக்கு தகுதியானதல்ல அது என்று கலாம் தெரிவித்துள்ளார்.
80 வயதான அப்துல்கலாம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார்.
பின்னர் நாடு திரும்பும் போது நியூயார்க் ஜான் எப். கென்னடி ஏர்போர்ட்டில் முன்னாள் குடியரசுத்தலைவர் என்றும் பாராமல் அவருடைய கோட், காலணி உள்ளிட்டவற்றை அவிழ்த்து சோதனை செய்தனர்.
அமெரிக்கா மன்னிப்பு
கலாமை இதுபோல அமெரிக்கர்கள் அவமரியாதை செய்வது இது கடந்த 3 ஆண்டுகளில் 2வது முறையாகும என்பதால் நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த செயலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையும் மன்னிப்பு கோரியது.
இந்தநிலையில் மேற்கு வங்கமாநிலத்தில் நடைபெற்றுவரும் ஐஐடி பொன்விழாவில் பங்கேற்பதற்காக அப்துல்கலாம் இன்று கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவின் செயல் குறித்தும் மன்னிப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கலாம் பெருந்தன்மை
அது குறித்து பதிலளித்த கலாம், மறந்துருங்க, மறந்துருங்க, அது ஒன்றும் மிகப்பெரிய விசயமில்லை,. பேசுவதற்கு உகந்ததல்ல என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடன் கூறினார் கலாம்.
இந்தியா மின்தேவை நிறைவேறும்
பின்னர் அவரிடம் கூடங்குளம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கூடங்குளத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அணுமின்நிலையம் பாதுகாப்பானது. இந்தியாவிற்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்தேவை உள்ளது எனவே கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
அணு உலையை பார்வையிட்டவரையில் நவீன முறையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அணு உலையில் பாதுகாப்பு குறிந்து சந்தேகம் எழுப்புபவர்கள் யாராக இருந்தாலும் தன்னை சந்திக்கலாம் என்றும் அப்துல்கலாம் தெரிவித்தார். முதல் அணு உலை டிசம்பர் மாத இறுதியில் செயல்படத் தொடங்கும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர்.

0 கருத்துகள்: