தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.11.11

இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் !


குஜராத்தில், முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும், அதனைத் தொடர்ந்தும், மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய, ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அரசு, பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் தொடர்ந்து பல பதவிகளை வழங்கி வருகிறது.பி.சி.பாண்டே(1970பாட்ச்):-....
இனப்படுகொலை நடைபெற்ற வேளையில், அஹ்மதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர்.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலை நிகழ்த்துவதற்கு, உதவும் விதமாக போலீஸை செயலற்றதாக்கினார்.


அவர், 1000 முஸ்லிம்கள், அஹ்மதாபாத்தில் கொல்லப்பட்ட வழக்கில் ஆதாரங்களை அழித்ததும், தொடர்ந்து நடந்த போலி என்கவுண்டர்களில் பங்கு வகித்ததும் நிரூபணமானது.


2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அன்றைய பா.ஜ.க அரசு, இவரை சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக நியமித்தது.


இதற்கு எதிராக, மனித உரிமை ஆர்வலர், டீஸ்டா ஸெடல்வாட் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.


குஜராத் வழக்குகளின் விசாரணை பொறுப்புகளிலிருந்து, நீதிமன்றம் பாண்டேவை நீக்கியது.


2009ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பாண்டே, குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

0 கருத்துகள்: