தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.11

ஈரான் மீது தாக்குதலுக்கு தயாராகிறது இஸ்ரேல் : சீமொன் பெரஸ்


ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் செய்யாது என்று இனியும் கூறமுடியாதென நேற்று முன்தினம் இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரஸ் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது இஸ்ரேல் ஈரானுடனான போருக்கு தயாரவதை மறைமுகமாக அவர் தெரிவித்தார். தமது மோசாட் உளவுப்பிரிவினர் இஸ்ரேல் தாக்குதலை நடாத்த தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானதென தமக்குத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஈரான் அணு குண்டை தயாரிக்கும் பணிகளை முடிவடைக்கும் இறுதிப் பருவத்திற்குள் நுழைந்துவிட்டதெனக் கூறிய அவர் ஈரானின் அணு குண்டு இஸ்ரேலுக்கு பாரிய ஆபத்து என்றும் தெரிவித்தார். போர் ஒன்று வந்தால் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய மக்கள் எப்படியாக உயிர் தப்பி வாழ்வதென்ற பயிற்சி ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். மேலும் பலிஸ்ரிக்ஸ் மிசைல்ஸ் ஏவும் பரிசோதனையும் கடந்த புதனன்று நடைபெற்றுள்ளது. பாலஸ்தீன விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறும் இஸ்ரேல் இப்போது ஈரானை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டி விவகாரத்தை மேலும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்போகிறது. இந்தப் போரைக் காரணம் காட்டி பாலஸ்தீனருக்கு அல்வா கொடுக்கவும் இஸ்ரேல் திட்டமிடலாம். மத்திய கிழக்கு அரசியல் மாற்றத்திற்கான மேலைத்தேய வரைபு எதிர் பார்த்ததைவிட வேகமாக நகர்கிறது.

0 கருத்துகள்: