தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.11

செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப ரஸ்யா தயாராகிவிட்டது


செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப தயாராகிவிட்டதாக இன்று ரஸ்யா அறிவித்துள்ளது. சந்திரனுக்கு மனிதனை அனுப்பிய அமெரிக்க சாதனையை முறியடித்து உலக முதன்மை பெற ரஸ்யா முடிவு செய்துவிட்டது. கடந்த 520 தினங்களாக செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பும் உடற் தகுதியை பெறுவதற்காக பலரை பரிசோதித்தனர் ரஸ்ய விஞ்ஞானிகள். செவ்வாய்க்கிரகத்தின் தரைமேல் நிலவும் சூழலுக்கு கட்டுப்பட்டு, மோசமான பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மனோபலம், உடற் தைரியத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை அறிய இந்த சோதனைகள் நடாத்தப்பட்டது. இதில் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். மூன்று ரஸ்யர்கள், ஒரு பிரான்சியர், ஒரு இத்தாலியர், ஒரு சீனர் இந்த
கடும் பயிற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். செவ்வாய்க்கிரகத்தில் இறங்கி ஆய்வுகளை செய்ய ஆறு பேர் தகுதி பெற்றுவிட்டனர் என்ற செய்தியை பெருமையுடன் ரஸ்யா அறிவித்தது. செவ்வாய்க்கு முதல் தடவையாக ஆட்களை அனுப்பினால் மட்டுமே ரஸ்யா இழந்த உலக முதன்மையை மறுபடியும் பெறலாம் என்பது தெரிந்த விடயமே. புதிதாக அதிபர் பதவிக்கு வரவுள்ள புற்றின் சோவியத் ரஸ்யா காலத்தை மறுபடியும் கொண்டுவர முடிவெடுத்துள்ளார். சீனாவின் எழுச்சி, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, ரஸ்யாவின் பின்னடைவு ஆகிய முக்கோண நெருக்கடிகளை உடைத்து முதன்மை இடத்திற்கு குறுக்கு வழியில் முன்னேற மனிதன் செவ்வாயில் கால் பதிக்க வேண்டுமென ரஸ்யா கருதுகிறது. அதை தானே செய்ய வேண்டுமெனவும் எண்ணுகிறது. சந்திரனுக்கு மனிதனை அனுப்ப இருக்கும் சீனாவின் புகழை உடைத்தெறிய இது அவசியமாகும்.

0 கருத்துகள்: