புதுடெல்லி, நவ. 8- தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 4 மாநகரங்களில் தொடங்குகிறது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் இதற்கான பணிகள் படிப்படியாக முடிவடையும். இந்த புதிய தொழில்நுட்பம் ரூ.40
ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பொது மக்கள் குறைந்த செலவில் அதிக சேனல்களை மிகத்துல்லியமாக காணமுடியும்.
ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பொது மக்கள் குறைந்த செலவில் அதிக சேனல்களை மிகத்துல்லியமாக காணமுடியும்.
மேற்கண்ட தகவல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அம்பிகா சோனி நேற்று தெரிவித்தார். புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதும் சந்தா உள்பட பல வழிகளில் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக