தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.10.11

இஸ்லாமிய முறைப்படி கடாபி அடக்கம் செய்யப்படுவார் லிபிய மேலதிக அரசு அறிவிப்பு


கடாபியின் சடலம் குளிர்சாதனப் பெட்டியில் சில தினங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று லிபிய மேலதிக அரசு அறிவித்துள்ளது. மேலும் சில தினங்களில் இஸ்லாமிய முறைப்படி அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளனர். கடாபியின் உடல் எங்கே வைக்கப்பட்டுள்ளதென்ற தகவல் வெளியிடப்படவில்லை, ஆனால் அடக்கம் செய்யப்படும்
இடத்திற்கு
அருகாமையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை கடாபியின் மகன்மார் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்கள் கைது செய்யப்பட்டார்களா இல்லை கொல்லப்பட்டார்களா என்பது தெரியவில்லையென்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சர்வதேச நீதிமன்றின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒப்படைக்கப்படுவார் என்று பிறிதொரு செய்தி தெரிவிக்கிறது.
நாளை லிபிய போராளிகளின் உயர்மட்டத் தலைவர் முஸ்தாபா அப்டுல் ஜலீட் நாளை லிபியா விடுதலை அடைந்துவிட்ட செய்தியை உத்தியோகபூர்வமாக வெளியிடுவார். இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாத காலத்தில் புதிய அரசு அமைக்கப்படும். அதைத் தொடர்ந்து எட்டு மாத காலத்தில் ஜனநாயக தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார். அதேநேரம் லிபிய மேலதிக அரசின் பொறுப்பாளராக இருந்த ஜலீல் தனது பணி முடிவதாக அறிவிப்பார் என்று அல் ஜஸீரா தெரிவிக்கின்றது.

0 கருத்துகள்: