சென்னை மாநகராட்சியை, முதன் முறையாக அதிமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதால் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் சென்னை மாகராட்சிக்கு,
திமுகவின் மா.சுப்பிரமணியத்தை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின்
சைதை துரைசாமி, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.இந்நிலையில் சென்னை மாகராட்சிக்கு,
திமுகவின் மா.சுப்பிரமணியத்தை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின்
ஆண்டாண்டு காலமாக சென்னை மாநகராட்சி திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலையில், முதன் முறையாக அதிமுக இம்மாநகராட்சியை கைப்பற்றுகிறது.
இதையடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் லயோலா கல்லூரி வளகாத்தில் அதிமுகவினர் ஒன்று திரண்டு தமது மகிழ்ச்சியை பட்டாசு கொளுத்தியும், இனிப்பு வழங்கியும் பகிர்ந்து கொண்டனர்.
இதேவேளை ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட மல்லிகா பரமசிவம் சுமார் 46,152 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட மல்லிகா பரமசிவம் சுமார் 46,152 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக