தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.9.11

ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து 70 வயது முதியவர் கின்னஸ் சாதனை


ஆங்கில கால்வாயை 18 மணி நேரத்தில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்தார் 70 வயது முதியவர்.
இதன் மூலம் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த இரண்டாவது முதியவர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். உலகின் கடல் வழி வர்த்தகத்திற்காக மிகவும் பிசியான கால்வாய் ஆங்கில கால்வாய் ஆகும். அட்லாண்டிக் கடல்பகுதியின்
வடக்கே அமைந்துள்ளது.இங்கிலாந்தின் தெற்கு பகுதி, பிரான்சின் வடக்குப்பகுதியினை இணைக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் அரண்மணையில் நீண்ட வருடங்களாக விசுவாசியாக பணியாற்றி வரும் ரோஜர்ஆல்சோப் (70) என்பவர் ஆங்கில கால்வாயினை 18 மணிநேரத்திற்குள் நீந்தி சாதனை படைத்தார்.
முன்னதாக கென்ட் மாகாணத்தில் டோவர் நகரில் உள்ள ஷேக்ஸ்பியர் கடற்கரை பகுதியிலிருந்து நேற்று தனது நீச்சல் பயணத்தை துவக்கினார். மொத்தம் 21 கடல் மைல்கள் நீந்தி 17 மணிநேரம் 51 நிமிடங்களில் பிரான்ஸ் நாட்டு கடல்எல்லையினை அடைந்து சாதனை படைத்ததாக டெய்லிமெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒரு கின்னஸ் சாதனை எனவும் அந்த பத்தரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க விமானப்படையில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜியார்ஜ் புருன்ஸ்டட் 70 என்பவர், கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆங்கில கால்வாயினை 15 மணி நேரம் 59 நிமிடங்களில் 21 கடல்மைல்கள் (நாட்டிக்கல்ஸ்) வரை நீந்தி சாதனை படைத்தார். இந்த சாதனையை தற்போது ரோஜர்ஆல்சோப்பால் முறியடிக்க இயலவில்லை. எனினும் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த இரண்டாவது முதியவர் என்ற பெருமையினை பெற்றார்.

0 கருத்துகள்: