புதுடெல்லி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ராஜீவ்காந்தி கொலை பின்னணியில் மறைமுகமாக தி.மு.க.வும் ஒரு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதுபற்றி டெல்லியில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி, எங்களை பொறுத்தவரை ராஜீவ் படுகொலை மிகவும் உணர்ச்சிகரமாக துயர சம்பவம்.
இங்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்க முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் அரசியல் ஆக்கப்படுவதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக