தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.5.11

சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு


விமான நிலையங்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதையொட்டி நாடு முழுவதும் விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 10 விமான நிலையங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் சென்னை, பெங்களுர், ஐதராபாத், டெல்லி, மும்பை, அகர்தலா ஆகிய விமான நிலையங்கள் அடங்கும். சென்னை விமான நிலையத்தில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் படி இந்திய விமான ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாட்டின்படி விமான நிலையத்தில் கூடுதலாக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும்.
தற்போது லக்கேஜ் கொண்டு செல்லும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் குறைவாக உள்ளன.
மேலும் பயணிகள் வந்து இறங்கும் நுழைவாயில் பகுதிகளிலும் கூடுதலான காமிராக்கள் பொருத்தப்படும். விமான நிலைய நுழைவு வாயிலிலேயே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொள்வார்கள். ஓய்வறை, உடமைகள் எடுத்து செல்லும் இடம், போர்டிங் பாஸ் போடும் இடம் உள்பட 7 அடுக்கு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் அமுல்படுத்தப்படுகிறது.
தற்போது சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஏராளமான தொழிலாளர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். அவர் களும் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

0 கருத்துகள்: